இலங்கையில் நடப்பது பொருளாதார நெருக்கடிக்கான பிரச்சனை இல்லை என்றும், இது நீண்ட காலமாக தமிழ் தேசிய இனத்தை ஒடுக்குவதற்காக நடந்து வரும் பிரச்சனை என்றும் இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளும், ஈழத்தமிழர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் குறித்தும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, இலங்கையில் நடப்பது பொருளாதார நெருக்கடிக்கான பிரச்சனை இல்லை என்றும், இது நீண்ட காலமாக தமிழ் தேசிய இனத்தை ஒடுக்குவதற்காகவும் நடந்து வரும் பிரச்சனை என்றும் கூறினார்.
இன வெறியும், மத வெறியும், இலங்கையில் அதிகமாக உள்ளதாக கூறிய அவர், இந்திய வடக்கு கிழக்கு இணைத்து ஒரு இடைக்கால அரசு கொண்டு வர வேண்டும். தங்களது மக்களை காப்பாற்ற ஒரு போர் படை வேண்டும் என்றார். 70 ஆயிரம் தமிழ் மக்கள் கொள்ளப்பட்டது குறித்து கணக்கெடுப்பு எடுக்கவில்லை என்ற அவர், பொது ஜன வாக்கெடுப்பை கோவெட் அமைப்பு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
8 கோடி தமிழ் மக்கள் அனைவரும் ஈழத் தமிழர்களுக்கான உரிமை பிரச்சனையில் ஆதரவை தர வேண்டும் என சிவாஜிலிங்கம் கேட்டுக்கொண்டார். இடைக்கால நிர்வாகம் அமைக்க ஒரு அழுத்தும் கொடுத்து பொதுசன வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்த வேண்டும். தமிழ் மக்களுக்கான பாதுகாப்பை கொண்டுவரவேண்டும் என்றார். ஈழத்தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு ஆதரவு அளிப்பதோடு, தங்கள் கோரிக்கையை ஏற்று உடனடியாக 4 ஐஏஎஸ் அதிகாரிகளை அனுப்பி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட உணவுப் பொருள்கள் அங்கு இருக்கும் தமிழர்களுக்குச் சென்று சேர்கிறதா என்று இந்திய மற்றும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்ற அவர், 130 கோடி இந்திய மக்களின் ஆதரவை நாங்கள் கேட்கிறோம் என கூறினார். அங்குள்ள மலையக தமிழ் மக்கள் எப்போதும் இடிந்து விழும் நிலையில் உள்ள வீட்டில் தான் வாழ்ந்து வருவதாக வேதனை தெரிவித்தார். ஒரு கிலோ கத்திரிக்காய் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் கூறினார். ரணில் விக்கிரமசிங்கே மோசடியில் ஈடுபடுபதாக குற்றம்சாட்டிய சிவாஜிலிங்கம், அவர் ஏற்கனவே மக்களை ஏமாற்றியவர் என்றும் மத்திய வங்கியில் கோடான கோடி ஊழலில் ரணில் விக்ரமசிங்கே பெயர் உள்ளது என்றும் குற்றம்சாட்டினார். ரணில் விக்ரமசிங்கே தமிழர்களுக்கு விரோதமானவர் என்பதோடு, சிங்கள இனவாதம் தான் அவரிடம் மோலோங்கி இருக்கும் என்றும் தெரிவித்தார்.
Advertisement: