முக்கியச் செய்திகள் தமிழகம்

நானும் விவசாயி தான்; எனக்கென்ன தொழிற்சாலையா உள்ளது? – இபிஎஸ்

எட்டு வழி சாலையால் யாரும் பாதிக்கப்பட கூடாது என்பது, தனது நிலைப்பாடு என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மெய்யனுர் பகுதியில் பெண்களுக்கான இலவச தொழிற்பயிற்சி மையத்தை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக தேர்தலில் தெரிவித்த 70% வாக்குவுறுதிகளை இன்னும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவதாக குற்றம்சாட்டினார். மேலும், சொத்து வரியை உயர்த்தி மக்களுக்கு அரசு துரோகம் செய்துள்ளதாக தெரிவித்த அவர், இதுபோன்ற செயல்கள் மக்களுக்கு வேதனை அளிப்பதாக கூறினார்.

வேளாண் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்து அம்மாவின் அரசு. ஆனால், தற்போதைய அரசு திட்டத்தை தாங்கள் தான் கொண்டு வந்தாக ஏமாற்றுவதாக குறிப்பிட்ட அவர், மக்களை ஏமாற்றியது போல அரசு ஊழியர்களையும் ஏமாற்றி வருவதாக தெரிவித்தார். மேலும், எட்டு வழி சாலையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக திமுக உள்ளிட்ட அரசியல் கட்சி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், தற்போது அந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சிகள் எல்லாம் ஆதரவு தெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அந்த திட்டத்தை நிறைவேற்ற தற்போது திட்டம் திட்டமிட்டப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

அண்மைச் செய்தி: ‘சோதனைகளுக்கும் முடிவு கட்டியிருக்கிறோம்’ – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

மேலும், அதிமுக ஆட்சியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு புதிய நில எடுப்பு சட்டத்தில் பல மடங்கு நிவாரணம் உயர்த்தி வழங்கப்பட்டது என குறிப்பிட்ட அவர், எட்டு வழி சாலையால் யாரும் பாதிக்கப்பட கூடாது என்பது தனது நிலைப்பாடு என தெரிவித்தார். தானும் விவசாயி தான் என தெரிவித்த அவர், எனக்கு என்ன 10, 15 ஆலையா, தொழிற்சாலையா உள்ளது என கேள்வி எழுப்பினார். மேலும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என தெரிவித்த அவர், நாட்டின் முன்னேற்றம் தேவை கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Advertisement:
SHARE

Related posts

30 நிமிடங்களில் 1M பார்வையாளர்களைக் கடந்த ‘வலிமை’

Halley Karthik

அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது: பழனிசாமி

Saravana Kumar

பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க பாஜக அரசு தயாரக இல்லை; கனிமொழி எம்பி விமர்சனம்

Saravana Kumar