முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தலைமை தகவல் ஆணையராகிறாரா இறையன்பு?

தமிழ்நாடு தகவல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான குழுவின் அறிக்கையை முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் தேடுதல் குழு தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி இன்று சமர்ப்பித்தார்.

தமிழக தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்கள் 4 பேரின் பதவி காலம் நிறைவடைந்துள்ள நிலையில், தகவல் ஆணையர்களுக்கான தேடுதல் குழு தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி நியமிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து தேடுதல் குழு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை, தகவல் ஆணையர்கள் பதவிக்கு தேர்ந்தெடுக்கும்
பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், இன்று குழுவின் அறிக்கையை முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் தேடுதல் குழு தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி சமர்ப்பித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதன்படி தற்போது தேர்வுக் குழு அளித்த தகுதியானவர்கள் பட்டியல் அடிப்படையில் தகவல் ஆணையர்களை முதலமைச்சர், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் கொண்ட குழு விரைவில் கூடி தேர்வு செய்யவுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு தலைமைச் செயலாளராக உள்ள இறையன்பு தலைமை தகவல் ஆணையர் பொறுப்பிற்கு விண்ணப்பித்து உள்ளார்.

இதன்படி, ஒருவேளை தலைமை தகவல் ஆணையராக இறையன்பு தேர்வு செய்யப்பட்டால், அவர் தலைமை செயலர் பதவியில் இருந்து முன்கூட்டியே விடுவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, இறையன்பு பணி நிறைவு பெறும் ஜூன் 16- ஆம் தேதிக்கு முன்னதாகவே ஓய்வில் செல்ல முடிவெடுத்துள்ளார்,. அடுத்த தலைமைச் செயலாளரை தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனை நடைபெற்று வருவதை நியூஸ் 7 தமிழ் முன்னதாகவே தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Web Editor

தரமற்ற முறையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு: இபிஎஸ் குற்றச்சாட்டு

Arivazhagan Chinnasamy

இலங்கையின் புதிய அதிபர்?…அரசியல் சாசன சட்டம் சொல்வது என்ன?…

Web Editor