ஜெயராஜ், பென்னிக்ஸ் நினைவு நாள்: 3 ஆண்டுகளாகியும் நீதி கிடைக்கவில்லை என குடும்பத்தினர் வேதனை!

போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. 3 ஆண்டுகளாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என அவர்களது குடும்பத்தினர்…

போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. 3 ஆண்டுகளாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என அவர்களது குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரின் மகன் பென்னிக்ஸ் ஆகியோர், விசாரணைக்காக 2020-ம் ஆண்டு, ஜூன் 21-ம் தேதி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகிய இருவரும் 22, 23 ஆகிய அடுத்தடுத்த நாள்களில் உயிரிழந்தனர்.காவல் நிலையத்தில் அவர்கள் மீது காவலர்கள் நடத்திய கொடூர தாக்குதலே உயிரிழந்தனர்.

இந்தக் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உள்ளிட்ட 10 போலீஸார், சி.பி.சி.ஐ.டி போலீஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த பிற காவலர்கள் அனைவரும் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். சி.பி.சி.ஐ.டி போலீஸாரின் விசாரணையிலும், கோவில்பட்டி குற்றவியல் நடுவர் மன்றத்தின் நடுவர் பாரதிதாசனின் விசாரணையிலும் தலைமைக் காவலர் ரேவதியின் துணிச்சலான சாட்சியம், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்-ஐ போலீசார் கொடூரமாக தாக்கியதின் முழுவிபரமும் வெளிவந்தது.

இந்த நிலையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஜெயராஜின் குடும்பத்தினர், உறவினர்கள், வியாபாரிகள், நண்பர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது பென்னிக்ஸ்-ன் சகோதரி பெர்சி நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், 3 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்கவில்லை, அதற்காக ஓடி கொண்டு இருக்கிறோம் என்றார். மேலும் 46 சாட்சிகள் விசாரணை செய்தும் இதுவரை தீர்ப்பு கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்தார். அதோடு நீதித்துறையை மட்டுமே தாங்கள் நம்பியுள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த வழக்கின் தீர்ப்பு, காவல்நிலையங்களில் நடக்கும் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

பென்னிக்ஸ்-ன் சகோதரி பெர்சி- யுடன் நமது தலைமைச் செய்தியாளர் சுடலை குமார் நடத்திய முழு கலந்துரையாடலை காண….

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.