முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்துள்ளனர். தமிழக சட்டசபையில் பொது பட்ஜெட் மற்றும்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்துள்ளனர்.

தமிழக சட்டசபையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் சூழ்நிலையில் அமைச்சரவை கூடுகிறது. இந்த பட்ஜெட்டில் முக்கிய திட்டங்கள் இடம் பெறுகின்றன. அதில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் முன்னோடி திட்டமும் இடம் பெறவுள்ளது.

அண்மைச் செய்தி : பள்ளி மாணவி பாலியல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு

பொது பட்ஜெட்டில் இடம் பெறும் திட்டங்கள், அவற்றுக்கு ஒதுக்கப்படும் நிதி பற்றிய ஆலோசனையை அமைச்சரவை மேற்கொள்ள உள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி ஆகிய அம்சங்களுக்கு இந்த அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும். தொழில்துறையில் சார்பில் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படவுள்ளன.

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்ட மசோதாவை, ஆளுநர் திருப்பி அனுப்பியது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படவுள்ளது. 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வரும் 20ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.