முக்கியச் செய்திகள் தமிழகம்

இடைத்தேர்தல் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தேமுதிகவில் சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாத் ஆகியோரை வேட்பாளர்களாக அந்தந்த கட்சி அறிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிமுக போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேர்தல் பணிக்குழுவும் அமைக்கப்பட்டு தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரப்பன்சத்திரம் பகுதியில் அதிமுகவின் கிளைக் கழக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி தலைமையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தலில் தேர்தல் பணி குழுவில் நியமிக்கப்பட்டவர்கள் பல தேர்தலை கண்டவர்கள். இந்த இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி இலக்கை அடைய அயாராது உழைத்து வருகிறோம்.
வரலாறு காணாத வெற்றியடைய எடப்பாடி ஆலோசனை வழங்கியுள்ளார். வெற்றி எளிதில் அடைய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி செங்கோட்டையில் எதிரொலிக்கும். திமுக கூட்டணி மாடியில் இருந்து மக்களைப் பார்க்கிறார்கள் அதிமுக மக்களோடு நின்று மக்களை பார்க்கின்றது.

ஆட்சி மன்ற குழு கூட்டம் சென்னையில் நடைபெறும். அதிமுக பிரச்சாரம் தொடங்கி நடைபெறுகிறது . அதிமுக பொருத்தவரை தேர்தல் பணியை மேற்கொண்டு வருகிறது. இன்னும் பணிகள் வேகமாக நடைபெறும். மாற்றம் தேவை என மக்கள் நினைப்பதாகவும், இந்த தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். சென்னையில் ஆட்சி மன்ற குழு கூட்டம் கூடி இடைத்தேர்தல் வேட்பாளரை முடிவு செய்யும். இடைத்தேர்தலில் அதிமுகவுடன் யார் யார் கூட்டணி என்பது குறித்து 2 நாட்களில் அறிவிக்கப்படும் என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடித்திடுக – ஜி.கே.வாசன்

EZHILARASAN D

ஊரக உள்ளாட்சி தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை

G SaravanaKumar

சென்னை மாநகராட்சியில் 203 ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

G SaravanaKumar