ஜனவரி 31- ல் தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் 2 பகுதிகளாக அதாவது 27 அமர்வுகளாக, 66 நாட்கள்…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் 2 பகுதிகளாக அதாவது 27 அமர்வுகளாக, 66 நாட்கள் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

2023-2024-ஆம் நிதியாண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இன்று வெளியிட்டுள்ளார்.

கடந்த மாதம், பல்வேறு இடையூறுகளால், குளிர்கால கூட்டத்தொடர் முன்னதாகவே நிறைவு பெற்றது. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து ட்விட்டரில் அறிவிப்பை வெளியிட்டுள்ள மத்திய அமைச்சர் ஜோஷி, “பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர், 2023 ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை 66 நாட்கள் வழக்கமான இடைவேளையுடன் 27 அமர்வுகளுடன் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் அம்ரித் காலின் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு மத்தியில், குடியரசுத் தலைவர் உரை, யூனியன் பட்ஜெட் மற்றும் பிற பொருட்களுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் “பட்ஜெட் அமர்வின் போது, 2023 பிப்ரவரி 14 முதல் மார்ச் 12 வரை இடைவேளையாக இருக்கும். இந்த இடைவேளையின் போது, துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் மானியங்களுக்கான கோரிக்கைகளை ஆய்வு செய்யவும், அவற்றின் அமைச்சகங்கள், துறைகள் தொடர்பான அறிக்கைகளை உருவாக்கவும் உதவும்” என்றும் ஜோஷி கூறினார்.

அது மட்டுமின்றி பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரின் போது, அருணாச்சல பிரதேசத்தின் தவாங்கில் உண்மையான கட்டுப்பாட்டு கோடு (எல்ஏசி) வழியாக இந்திய மற்றும் சீன துருப்புக்கள் இடையே டிசம்பர் 9 அன்று நடந்த மோதல் குறித்து விவாதிக்க அனுமதிக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இது பல இடையூறுகளுக்கு வழிவகுத்தது.

இதற்கிடையில், உக்ரைன் போருக்குப் பிறகு, உலகளவில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, உலகமே தொடர்ந்து போராடி வருகிறது. இந்த நிலையில் , பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) 2023 இல் வரவிருக்கும் மந்தநிலை குறித்து எச்சரித்துள்ளன.

இந்த சூழ்நிலையில் நடைபெற உள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.