தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ‘Z பிரிவு’ பாதுகாப்பு!!

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய, மாநில உளவுப்பிரிவு…

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய, மாநில உளவுப்பிரிவு தகவல் அளித்துள்ளது. ஏற்கனவே அண்ணாமலைக்கு Y பிரிவு பாதுகாப்பில், 2 தனிப்பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 11 பேர் கொண்ட ஆயுதமேந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் மாநில போலீசார் ஆகியோர் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அவருக்கு அளிக்கப்பட்ட Y பிரிவு பாதுகாப்பை நீக்கி Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அண்ணாமலையிடம் Z பிரிவு அனுமதி விருப்பத்தை கேட்டு அவரிடம் கையெழுத்து கேட்டு பெற்றுள்ளனர். இதன் அடுத்த கட்டமாக அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக மாநில அரசு முடிவு எடுக்கும் என்று தெரிய வருகிறது. மாநில அரசு ஒப்புதல அளித்த பின்னர் 32 கமாண்டோ வீரர்கள் சுழற்சி முறையில் அண்ணாமலைக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.