”கோட்டையில் கொடியேற்றுவதை நேரில் காண கடிதம் எழுதிய சிறுவன்“ – ஆசையை நிறைவேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

”கோட்டையில் கொடியேற்றுவதை நேரில் காண விரும்பி கடிதம் எழுதிய சிறுவனின் ஆசையை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றினார். சுதந்திரத் தின விழாவையொட்டி தலைமைச் செயலகக் கோட்டை கொத்தளத்தில்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி…

”கோட்டையில் கொடியேற்றுவதை நேரில் காண விரும்பி கடிதம் எழுதிய சிறுவனின் ஆசையை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றினார்.

சுதந்திரத் தின விழாவையொட்டி தலைமைச் செயலகக் கோட்டை கொத்தளத்தில்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார்.

சுதந்திர தின விழாவை நேரில் காண விரும்பிய இராமநாதபுரம் மாவட்டம் பாப்பனம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவன் விதர்சன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் மாணவரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், சுதந்திர தின விழாவை காண்பதற்காக மாணவர் விதர்சன் சென்னை அழைத்து வரப்பட்டு சுதந்திர தின விழாவில் பங்கேற்று முதலமைசர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றும் நிகழ்வை நேரில் பார்வையிட்டார்.

இது குறித்து லிதர்சனி தாயார் அமுதவல்லி தெரிவித்ததாவது “ எனது மகனின் ஆசையின்படி எங்களை சென்னை அழைத்து தங்க வைத்து கொடியேற்றும் நிகழ்வை நேரில் காணச் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி “ என தெரிவித்தார்.

இதுகுறித்து முதலமைச்சரின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..

பாப்பனம் ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்புப் படிக்கும் விதர்சன் என்ற மாணவன், முதலமைச்சர் சுதந்திர தின விழாவில் கொடி ஏற்றுவதை அருகில் இருந்து பார்க்க வேண்டும் என கடிதம் எழுதி இருந்தான். அந்தச் சிறுவனின் ஆசையை முதலமைச்சர்  நிறைவேற்றி வைத்தார்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://twitter.com/CMOTamilnadu/status/1691358153966051330

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.