“பிரிவினை போக்கி, ஒற்றுமையை ஏற்படுத்த உறுதிமொழி ஏற்போம்” -முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ட்வீட்!

சுதந்திர நாளில் மதவாதம், பிரிவினைவாதம், பிற்போக்குவாதத்தைப் போக்கி, வேற்றுமையில் ஒற்றுமையை ஏற்படுத்த உறுதிமொழி ஏற்போம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.  77-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு…

சுதந்திர நாளில் மதவாதம், பிரிவினைவாதம், பிற்போக்குவாதத்தைப் போக்கி, வேற்றுமையில் ஒற்றுமையை ஏற்படுத்த உறுதிமொழி ஏற்போம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். 

77-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சுதந்திர நாளில் மதவாதம், பிரிவினைவாதம், பிற்போக்குவாதத்தைப் போக்கி, வேற்றுமையில் ஒற்றுமையை ஏற்படுத்த உறுதிமொழி ஏற்போம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
‘நீங்கள் சமூக விடுதலை அடையாத வரை, சட்டத்தால் வழங்கப்பட்ட சுதந்திரத்தால் உங்களுக்கு எந்தப் பயனும் இல்லை -அம்பேத்கர்.
சுதந்திரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தை நாம் கொண்டாடும் இந்த வேளையில், நம் நாட்டின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவோம். இந்தியாவின் ஜனநாயகம், ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மை ஆகிய நமது அரசியலமைப்பின் இலட்சியங்களைப் பாதுகாக்க நாம் ஒன்றாக இணைந்து நிற்போம்.
மதவாதம், பிரிவினைவாதம், பிற்போக்குவாதம், வெறுப்புணர்வு, வேலைவாய்ப்பின்மை, வன்முறை, விலையுயர்வு என ஒன்பதாண்டுகளாக இந்தியாவைப் பீடித்துள்ள பிணிகளை அகற்றி, அன்பும் வேற்றுமைகளை மதிக்கும் பண்பும் – அனைத்துத் தரப்பினருக்குமான வளர்ச்சியும் நிறைந்த இந்தியாவுக்கு வழிவகுக்க இந்த விடுதலை நாளில் உறுதியேற்போம்!’ என்று பதிவிட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.