தேனி மாவட்டம், தேவதானப்பட்டி பேரூராட்சியில் சாய்ந்து விடும் நிலையில் உள்ள மின்கம்பங்களால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட
பகுதியில் தேனி, திண்டுக்கல், நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மூன்றுக்கும் மேற்பட்ட
மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளது. இதில் தேவதானப்பட்டி காவல் நிலையம்
அருகே உள்ள மின்கம்பம் முழுமையாக சாய்ந்து விழும் நிலையில் உள்ளதால்,
பொதுமக்கள் சாலையில் பயணிக்கும் போது அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய
சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், மின்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்படும்
முன், சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பங்களை சீரமைத்து,
விபத்தினை தடுக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை வேண்டுமென,
தேவதானப்பட்டி பேரூராட்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கு. பாலமுருகன்







