பாஜக மூன்றாவது இடம் என்று சொல்லக்கூடாது: திருமாவளவன்

பாஜக மூன்றாவது இடம் என்று சொல்லக்கூடாது வேண்டுமென்றால் பூஜியம் என்று சொல்லலாம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த திருமாவளவன் பேசுகையில், தமிழகத்தில் பாஜக நகர்ப்புற…

பாஜக மூன்றாவது இடம் என்று சொல்லக்கூடாது வேண்டுமென்றால்
பூஜியம் என்று சொல்லலாம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த திருமாவளவன் பேசுகையில், தமிழகத்தில் பாஜக நகர்ப்புற தேர்தலில் பெற்றிருக்கும் வாக்கு சதவீதம் திமுக வாக்கு பெற்ற சதவீதத்தில் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்.

பாஜக மூன்றாவது இடம் என்று சொல்லக்கூடாது>வேண்டுமென்றால்
பூஜியம் என்று சொல்லலாம். மூன்றாவது இடம் பெற்றிருக்கிறோம் என்று அவர்கள்தான் கூறுகிறார்கள், 0.5 சதவீதம் தான் சட்டமன்ற தேர்தலை விட தற்போது கூடுதல் என குறிப்பிட வேண்டும்.

சில இடங்களில் அதிமுக விட கூடுதலாக வாக்குகள் பெற்றுள்ளோம் என பாஜக கூறுவது அதிமுகவை சிறுமைப்படுத்தும் செயலாகும். மீண்டும் பாஜகவை தோளில் சுமந்தால் அதிமுக அதள பாதாளத்திற்கு சென்று விடும் என்பதால் தான் அதிமுக பா.ஜ.கவை கழட்டி விட்டது. அதிமுகவே பாஜகவை கழட்டி விடும் அளவிற்கு மக்களிடம் அவ நம்பிக்கையை பெற்று உள்ளது பாஜக என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.