முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

15 அடி ஆழ பள்ளத்திற்குள் அடுத்தடுத்து கவிழ்ந்த பைக்..!

பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் சாலை விரிவாக்க பணிகளுக்காக தோண்டப்பட்ட 15 அடி ஆழ பள்ளத்தில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அடுத்தடுத்து விழுந்ததில் 5 பேர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பூந்தமல்லி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் சாலை விரிவாக்கப் பணியினை கடந்த பல மாதங்களாக தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது .
இந்த நிலையில் பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம் சாலை சந்திப்பு பகுதியில் பூந்தமல்லி நோக்கி செல்லும் சர்வீஸ் சாலையில் மழைநீர் செல்வதற்காக கால்வாய் அமைக்க ராட்சத பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. இதனால் சர்வீஸ் சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பள்ளம் தோண்டப்பட்ட சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்லாத வகையில் நெடுஞ்சாலை துறையினர் முறையான பாதுகாப்பு தடுப்புகள் எதுவும் அமைக்கவில்லை. இந்த நிலையில் அந்த பகுதியில் ஏற்படும் வழக்கமான போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க, இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் ராட்சத பள்ளம் இருப்பது தெரியாமல் சர்வீஸ் சாலையில் சென்றுள்ளனர். அப்போது நிலை தடுமாறி 15 அடி ஆழ
பள்ளத்தில் அடுத்தடுத்து 5 பேர் உள்ளே விழுந்ததில் பலத்த காயங்கள் ஏற்பட்டதுடன், வலிதாங்காமல் கதறினர்.

இதையடுத்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததனர். தகவலை அறிந்து வந்த போக்குவரத்து காவல்துறையினர், பொதுமக்களோடு சேர்ந்து காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் மீட்க்கப்பட்ட 5 பேரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 5 பேருக்கு கை, காலில் எலும்பு முடிவு ஏற்பட்டது.

ஏற்கனவே இந்த பகுதியில் சாலை விரிவாக்க பணியின் போது வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்காக மிளிரும் ஒலிப்பான்கள், மின்விளக்குகள், தடுப்புகள் ஏதும் இல்லாமல் சாலை விரிவாக பணி நடைபெற்று வருவதால் தொடர்ந்து சாலை விபத்துகளில் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. தற்போது சர்வீஸ் சாலையில் தோண்டப்பட்ட ராட்சத பள்ளத்திற்கு தடுப்புகள் ஏதும் இல்லாததால் வாகன ஓட்டிகள் வேகமாக சென்று 15 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முறையான தடுப்புகள் அமைக்காமல் மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாலையே இதுபோன்ற விபத்துகள் ஏற்பட்டுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே மெட்ரோ ரயில் பணிகளால் சென்னைவாசிகள் சந்திக்கும் இன்னல்களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், கடந்த 21-ஆம் தேதி அன்று “நெரிசலில் நெளியும் சென்னை” என்ற தலைப்பில் ஒருநாள் முழுவதும் பிரமாண்ட கள ஆய்வை நியூஸ் 7 தமிழ் நடத்தியது.

இதில் சென்னையின் முக்கிய பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்ட பணிகளால், போக்குவரத்துச் சிக்கல்கள் ஏற்படுவதையும், வாகன ஓட்டிகள் இதனால் அவதிக்குள்ளாவதையும் இந்த கள ஆய்வின் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது . மேலும் பொதுமக்கள் மெட்ரோ ரயில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், போக்குவரத்தை சீர்ப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஏழைமக்களுக்கு 6 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது : ஓபிஎஸ்!

Halley Karthik

மதுரை அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோயிலில் ஆடித் திருவிழா திருத்தேரோட்டம் தொடங்கியது

Arivazhagan Chinnasamy

திருப்பூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் – அண்ணாமலை

Web Editor