தென்காசி மாவட்டம் கடையம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானை தென்னை மரங்களை சேதப்படுத்தியது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, சிறுத்தை, காட்டு யானை, காட்டெருமை, கட்டுப்பன்றி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம அதிகமாக காணப்படும். இந்த வனவிலங்குகள் அவ்வப்போது மலை கிராம பகுதியில் இறங்கி உலாவி வருவது வழக்கம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த விலங்குகள் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் நுழையாமல் இருக்க வனத்துறை சார்பில் மின் வேலி மற்றும் அகழி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அகழி சேதமடைந்த நிலையில் உள்ளது. சோலார் மின்வேலி பராமரிப்பு இல்லாததாலும், வனவிலங்குகள் ஊர் பகுதிக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்ச்சியாக உள்ளது.
இந்த நிலையில் கடையம் அருகே கருத்த பிள்ளையூரில் உள்ள கிஷோர் குமார் என்பவர் சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் தென்னை, மா, காட்டு நெல்லிக்காய் போன்றவை பயிரிட்டுள்ளார். மலைப்பகுதியில் இருந்து தோட்டத்தில் புகுந்த சுமார் 20 காட்டு யானைகள் 80 தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தும், 40 தென்னை மரங்களில் குருத்துகளை தின்றும் அங்குள்ள சொட்டு நீர் பாசன குழாய் சேதப்படுத்தி, வேலியை உடைத்து சென்றுள்ளது. இச்சம்பவம் நடைபெற்ற தோட்டத்திலிருந்து குடியிருப்பு பகுதி சுமார் 100 மீட்டரில் கிராமம் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர் .