புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…

பாரதியார் முதல் கண்ணதாசன் வரை பாடி புகழ்ந்த, கண்ண பெருமானின் பெருமையை கூறும் சில பாடல்களின் சிறு தொகுப்பு இது. வாருங்கள் பார்க்கலாம்… விஷ்ணுவின் அவதாரங்களில் மிக உன்னத அவதாரம் கிருஷ்ணாவதாரம். மற்ற கடவுள்களைவிட…

பாரதியார் முதல் கண்ணதாசன் வரை பாடி புகழ்ந்த, கண்ண பெருமானின் பெருமையை கூறும் சில பாடல்களின் சிறு தொகுப்பு இது. வாருங்கள் பார்க்கலாம்…

விஷ்ணுவின் அவதாரங்களில் மிக உன்னத அவதாரம் கிருஷ்ணாவதாரம். மற்ற கடவுள்களைவிட கிருஷ்ணனைப்பற்றி பற்றிப் பாடிய கவிஞர்கள் ஏராளம். பெரியாழ்வார் முதல், ஆண்டாள் வரை பாசுரங்கள் பாடியுள்ளனர். அந்தக் காலக் கவிஞர்கள் மட்டுமின்றி, பிற்காலக் கவிஞர்களும் கிருஷ்ணனைப் பற்றிப் பாடியிருக்கின்றனர். கண்ணனை தோழனாக, சேவகனாக, நண்பனாக தான் காணும் யாவற்றிலும் கண்ணனின் அம்சங்களே தோன்றுவதை அழகாகப் பாடியிருக்கிறான் பாரதி.

ஆழ்வார்கள் பாடிய கிருஷ்ணர் பாடல்களில் நின்ற நிலை, அமர்ந்த நிலை, சாய்ந்த நிலை என மூன்று நிலைகளை குறிபபிட்டுள்ளனர். ஆனால் கூடுதலாக தவழ்தல் என்ற குழந்தை கிருஷ்ணனின் நிலையை குறிப்பிடுகிறார் கண்ணதாசன். புருஷோத்தமன் ஆன கண்ணனின் புகழைப் பாடும்படிக் புல்லாங்குழலிடம் கேட்கிறார். அந்தப்பாடலில் குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் என புதிய நிலையை குறிப்பிடுகிறார்.

எங்கிருந்தோ வந்தான் என்ற பாடலில் கண்ணனின் உன்னத குணத்தை வெளிப்படுத்தும் பல்வேறு நிலைகளை குறிப்பிட்டு இருப்பார் கண்ணதாசன். ரங்கன் என்ற தான் பெறாத மகனை எண்ணி பாடும் வகையில் நண்பன் முதல் சேவகன் என வரிகளை தந்து பண்பிலே தெய்வம் என பரவசப்படுத்தியிருப்பார்.

‘கண்ணனை நினைக்காத நாளில்லையே’, ‘கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல’, ‘கண்ணா வருவாயா?’, ‘கண்ணா கருமைநிறக் கண்ணா’, ‘கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்’, ‘ கண்ணன் வரும் வேளை’ என கண்ணனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட திரைப்படப் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன. பஞ்சவர்ணக்கிளி திரைப்படத்தில் ‘கண்ணன் வருவான் கதை சொல்லுவான் என கவிஞர் வாலியும் கண்ணனை எண்ணி பாடல் தந்திருக்கிறார்.

  • ஜே.முஹமது அலி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.