கலைஞரின் பேனா, தமிழ்நாட்டின் எழுத்தின் அடையாளமாக இருக்கிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இராமேஸ்வரத்தில் மதிமுக மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் கராத்தே பழனிச்சாமி இல்லத் திருமண விழாவில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடலுக்குள் கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு சிலர் பொறாமையால் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார். அவ்வாறான எதிர்ப்புகளை பொருட்படுத்த வேண்டாம் என்று தெரிவித்த அவர், நர்மதை ஆற்றின் நடுப்பகுதியில் சர்தார் வல்லப்பாய் படேலுக்கு எப்படி மிகப் பெரிய சிலை வைத்தார்கள் என்றும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்களா என்றும் கேள்வி எழுப்பினார்.
காலத்தால் அழியாத காவியங்களை தீட்டிய கலைஞரின் பேனா முனை என்பது வரலாற்றை தீட்டியது என்றும், காவியங்களை தீட்டியது என்றும், கவிதைகளை தீட்டியது என்றும் வைகோ புகழாரம் சூட்டினார். மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பேனா, தமிழ்நாட்டின் எழுத்தின் அடையாளமாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.