“கலைஞரின் தாஜ்மஹால் என்றே கூறலாம்” – நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்!

கலைஞர் நினைவிடம் என்று சொல்வதை விட கலைஞர் தாஜ்மஹால் என்றே கூறலாம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அண்ணாவின் நினைவிட திறப்பு விழா இன்று…

கலைஞர் நினைவிடம் என்று சொல்வதை விட கலைஞர் தாஜ்மஹால் என்றே கூறலாம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அண்ணாவின் நினைவிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கி.வீரமணி, ஜி.கே.மணி, முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் வருகை தந்தனர். மேலும் நடிகர் ரஜினிகாந்த் விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் கலந்து கொண்டு, நினைவிடங்களை திறந்துவைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, சேகர் பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் வருகை தந்தனர்.

விழாவின் தொடக்கத்தில், முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் புகழை பறைசாற்றும் விதத்திலும், நினைவிடத்தின் புகழை கூறும் வகையிலும் காணொலி காட்சி ஒன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குரலில் ஒலிபரப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் மு.கருணாநிதியின் நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி திறந்துவைத்தார்.

இதனைத்தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் கலைஞரின் நினைவிடம் குறித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

“கலைஞர் நினைவிடம் என்று சொல்வதை விட கலைஞர் தாஜ்மஹால் என்றே கூறலாம். அந்த அளவிற்கு பிரம்மாண்டமாக உள்ளது. கலைஞர் நினைவிடத்தில் அமைந்துள்ள அனைத்து விஷயங்களும் சிறப்பாக உள்ளது கனவுலகம் போல் உள்ளது” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.