“திமுக அரசின் கொட்டம் தேர்தலில் அடக்கப்படும்..” – நயினார் நாகேந்திரன்

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, “தீபத்தூணில் தீபமேற்றலாம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பளித்த சில மணி நேரங்களுக்குள்ளேயே அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையிடுவோம் என மீண்டும் கூறியிருக்கிறது திமுக அரசு.…

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

“தீபத்தூணில் தீபமேற்றலாம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பளித்த சில மணி நேரங்களுக்குள்ளேயே அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையிடுவோம் என மீண்டும் கூறியிருக்கிறது திமுக அரசு. தீபமேற்றும் தமிழர் பண்பாட்டை முடக்க கங்கணம் கட்டிக் கொண்டுத் திரியும் அரசு, இன்னும் எத்தனை முறை நீதிமன்றத்தால் குட்டுப்பட்டால் திருந்தும்? எப்போது தான் தனது இந்து மத வெறுப்பைக் கைவிடும்?

https://x.com/NainarBJP/status/2008466888343609520

தனது பிரிவினைவாதப் போக்கிற்கு நீதிமன்றத்தில் அடி வாங்கியது போதாதென்று, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்களிடம் அடி வாங்கினால் தான் திமுக அரசு அடங்கும் போல! எல்லாம் இன்னும் 70 நாட்கள் தான்! எத்தனை மேல்முறையீடு வேண்டுமானாலும் செய்து திமுக அரசு கதறட்டும்! தமிழர் பண்பாட்டு விரோத திமுக அரசை வீழ்த்தி தீபத்தூணில் தீபமேற்றுவது 100% உறுதி”

இவ்வாறு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.