நெருங்கும் மாண்டஸ் புயல்; எந்தெந்த தேர்வுகள் ஒத்தி வைப்பு?

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல்கலைகழகங்களில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 210 கி.மீ தொலையில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. கடந்த 6…

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல்கலைகழகங்களில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 210 கி.மீ தொலையில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து மாமல்லபுரத்தில் இருந்து 180 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. இன்று இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 02.30 மணிக்குள் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. புயல் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்திருப்பதால் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை நடைபெறவிருக்கும்  சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதேபோல், நாளை நடைபெற இருந்த டிப்ளமோ தேர்வுகள் ஒத்திவைக்கபடுவதாக தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.