நெருங்கும் மாண்டஸ் புயல்: சென்னையில் நீடிக்கும் கனமழை

மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ள நிலையில் சென்னையில் காலை முதல் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.  தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் தீவிர புயலிலிருந்து புயலாக வலுவிழந்த…

மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ள நிலையில் சென்னையில் காலை முதல் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. 

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் தீவிர புயலிலிருந்து புயலாக வலுவிழந்த நிலையில் இன்று நள்ளிரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் வட கடலோர பகுதியை நோக்கி படிப்படியாக மாண்டஸ் புயல் முன்னேறி வருகிறது.  மாலை சுமார் 5 மணி நிலவரப்படி சென்னைக்குயிலிருந்து 170 கி.மீ தொலைவிலும், மாமல்லபுரத்திலிருந்து 135 கி.மீ தொலைவிலும் உள்ள மாண்டஸ் புயல், மணிக்கு 14 கி.மீ தொலைவில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையிலிருந்தே கனமழை பெய்து வருகிறது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. காற்றின் வேகமும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் கடல் சீற்றமும் அதிகரித்து காணப்படுகிறது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்க உள்ளதை முன்னிட்டு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.