ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் கோட்டுவீரம்பாளையத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சி அலுவலகத்தை தமிழக வெற்றி கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும் கழக அமைப்பு செயலாளருமான கே.ஏ செங்கோட்டையன் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், “தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு, மின்வெட்டே இல்லாத மாநிலம் ஏழை எளிய மக்களின் கண்ணீரைத் துடைக்க இலவச வீடு, இருசக்கர வாகனம் வழங்கப்படும் திட்டத்தை தமிழக வெற்றி கழகத் தலைவர் அறிவித்துள்ளார். ஒரு நல்ல மனிதர் தமிழகத்தை ஆள்வதற்கு தகுதியானவர். அந்த முறையில் நம்முடைய வெற்றி தளபதி தான் தமிழகத்தினுடைய நிரந்தர முதலமைச்சர். வரலாற்றை படைக்கிற நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி உள்ளது.
நல்லாட்சியை எதிர்நோக்கி மக்கள் பயணம் மேற்கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக சொல்ல வேண்டும் என்று சொன்னால் சிறிய குழந்தையிலிருந்து பெரியவர் வரை அவர் பெயரை சொல்லாதவரே இல்லை. அவர் தான் தமிழகத்தில் நிரந்தர முதலமைச்சராக வரவேண்டும் என்று அனைவரும் பேசுகின்றனர். நேசிக்கின்றவர்கள் தான் தமிழகத்தை ஆள வேண்டுமே தவிர நேசிக்காதவர்கள் தமிழகத்தை ஆள முடியாது. ஆகவே வெற்றிகழகத்தின் தலைவர் தளபதி விஜய் தான் எதிர்கால தமிழகம் என்பதை நாடே எதிர்நோக்கி காத்திருக்ககிறது.
234 தொகுதிகளிலும் அவர்தான் வெற்றி பெறுவார். அவர் யாரை கை காட்டுகிறாரோ அவர் தான் வெற்றி பெற்று வரலாற்றை படைப்பார். ஜனநாயகன் படம் தொடர்பான கேள்விக்கு நேற்றைய தினம் மாலை உயர் நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. இன்று அது தள்ளி வைக்கப்பட்டு மாலை அதற்கான தீர்ப்பு வழங்க இருக்கிறது. ஆகவே அதற்குள்ளே நுழையக்கூடாது. இப்போது உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எந்த கருத்தும் சொல்வது சரியாக இருக்காது.
தமிழக வெற்றி கழகம் வேகமாக நடை போடப் போகிறது என்பதை காலம் பதில் சொல்லும். எல்லோரும் வருவார்கள் அன்போடு கதவுகள் திறக்கப்பட்டு இருக்கிறது. வைகை செல்வன் கருத்திற்கு பதில் சொல்ல வேண்டியதில்லை. யாருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற தகுதி இருக்கிறது. தலைவர் சரியான நேரத்தில் சரியான முடிவை மேற்கொள்வார். திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான கேள்விக்கு முடிந்து போனதை பற்றி திருப்பி கேட்க வேண்டாம் நடக்கப் போவதை கேளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.







