15-வது ஐபிஎல்-ன் 29-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.
15-வது ஐபிஎல்-ன் 29-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நேற்று களம் கண்டன. இதற்கு முன்பு குஜராத் டைட்டன்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோதியது இதில், 2 பந்துகள் மீதமிருக்கும் நிலையில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.
இதேபோல, டெல்லி கேபிடல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் களம் கண்டது அதில், 14 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி மீண்டும் வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து, குஜராத் டைட்டன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது அதில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 3வது வெற்றியை பதிவு செய்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.
அண்மைச் செய்தி: ‘அரசு விவசாயிகளுக்கு உற்றதோழனாக இருக்கும்’ – முதலமைச்சர்
அதன்பின்னர், குஜராத் டைட்டன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் களம் கண்டது அதில், 5 பந்துகள் மீதமிருக்கும் நிலையில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. இதனால், முதல் தோல்வியை சந்தித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. தொடர்ந்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் களம் கண்ட குஜராத் டைட்டன்ஸ் அணி, 37 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்றது.
இதேபோல, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் களம் கண்டது இதில் 9 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து, லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் அணியுடன் மோதியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அதில் 3 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.
தொடர்ந்து, பஞ்சாப் கிங்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. அதில், 54 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் தோல்வியை சந்தித்தது.
அதனைத்தொடர்ந்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் களம் கண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியும் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று மோதியது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 169 ரன்களை எடுத்தது. அதனைத்தொடர்ந்து, 170 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பேட்டிங் செய்த குஜராத் அணி 19.5 ஓவர் முடிவில் 170 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







