திமுக அரசு என்றென்றும் விவசாயிகளுக்கு உற்றதோழனாக இருக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பாலவாடி உள்ளிட்ட பகுதிகளில் எரிவாயுக்குழாய் பதிப்பதற்காக கடந்த 3 நாட்களுக்கு முன் கெயில் நிறுவனம் சார்பில் நிலம் அளவீடு செய்யப்பட்ட நிலையில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கணேசன் என்ற விவசாயி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், விவசாயி கணேசன் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
அண்மைச் செய்தி: ‘தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் சாலை விபத்தில் உயிரிழப்பு’
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், உயிரிழந்த விவசாயி கணேசன் குடும்பத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட ஆணையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திமுக அரசு என்றென்றும் விவசாயிகளுக்கு உற்றதோழனாக இருக்கும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பு ஆறுதல் தருவதாக அவரின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








