சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி

15-வது ஐபிஎல்-ன் 28-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றிபெற்றது. 15-வது ஐபிஎல்-ன் 28-வது போட்டி டிஒய் பாட்டீல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத்…

15-வது ஐபிஎல்-ன் 28-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றிபெற்றது.

15-வது ஐபிஎல்-ன் 28-வது போட்டி டிஒய் பாட்டீல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் களம்கண்டன. இதற்கு முன்பு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதியது. அதில் 61 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றது. அதனைத்தொடர்ந்து, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் அணியுடன் மோதியது அதில் 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் அணி வெற்றிபெற்றது.

பின்னர், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மோதியது அதில் 14 பந்துகள் மீதம் இருந்த நிலையில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.

அதனைத்தொடர்ந்து, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதியது அதில் 5 பந்துகள் மீதம் இருந்த நிலையில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. அண்மையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் களம் கண்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 13 பந்துகள் மீதமிருக்கும் நிலையில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அண்மைச் செய்தி: ‘அரசு விவசாயிகளுக்கு உற்றதோழனாக இருக்கும்’ – முதலமைச்சர் 

இதேபோல, பஞ்சாப் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் களம் கண்டது. அதில் 6 பந்துகள் மீதமிருக்கும் நிலையில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

அதேபோல, பஞ்சாப் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் களம் கண்டது அதில் 33 பந்துகள் மீதமிருக்கும் நிலையில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.

தொடர்ந்து, பஞ்சாப் கிங்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடம் மோதியது அதில், 54 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. பின்னர், பஞ்சாப் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதியது அதில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி வாகை சூடியது.

அதனைத்தொடர்ந்து, பஞ்சாப் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது அதில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் நேற்று களம்கண்டன. அதில், டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 151 ரன்களை எடுத்தது. இதனால், 152 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 18.5 ஓவர் முடிவில் 152 ரன்களை எடுத்து அபார வெற்றியை பதிவு செய்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.