டாட்டூ குத்த வேண்டாம்; ரசிகருக்கு நடிகை சமந்தா அறிவுரை

முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் மூன்று டாட்டூக்கள் குத்திய சமந்தா ரூத் பிரபு ‘ஒருபோதும் டாட்டூ குத்த வேண்டாம்’ என ரசிகருக்கு அறிவுரை கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்…

முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் மூன்று டாட்டூக்கள் குத்திய சமந்தா ரூத் பிரபு ‘ஒருபோதும் டாட்டூ குத்த வேண்டாம்’ என ரசிகருக்கு அறிவுரை கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் 2010ம் ஆண்டு வெளியான விண்ணை தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனது திரைபயணத்தை தொடங்கினார். தொடர்ந்து 2012ம் ஆண்டு வெளியான நான் ஈ திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

இதை தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகரான விஜய், சூர்யா, தெலுங்கில் மகேஷ்பாபு, நாக சைதன்யா, நானி போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்தார். இதன் மூலம் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

இவர் கடந்த 2017ம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்தார். தற்போது இருவரும் திருமண உறவில் இருந்து விலகி தனித்தனியாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை சமந்தா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் என்னிடம் எதையும் கேளுங்கள் என்ற நிகழ்ச்சியில் ஈடுபட்டு ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் ஒருவர் சமந்தாவிடம், “டாட்டூ குத்தி கொள்ள நீங்கள் விரும்புகிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு சமந்தா “எப்போதும் டாட்டூ குத்திக் கொள்ளாதே. எப்போதாவது பச்சை குத்திக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

சமந்தா தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் 3 பச்சை குத்தியுள்ளார். அவரது முதுகில் ‘ஒய்எம்சி’ என்று வாசகம் எழுதியுள்ளார். இது தெலுங்கில் முதன்முதலில் அறிமுகமான ‘ஏ மாயா சேசாவே’ படத்தை நினைவுகூரும் விதமாக குத்தி கொண்டுள்ளார். அதில் அவர் நாக சைதன்யாவுடன் காதல் செய்தார். சமந்தாவின் விலா எலும்பில் அரிதாகக் குத்தப்பட்ட டாட்டூவில் நாக சைதன்யாவின் புனைப்பெயரான ‘சாய்’ என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் கடைசியாக, சமந்தாவின் மணிக்கட்டில் வைக்கிங் சின்னம் பச்சை குத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.