சிவகளையில் 3ம் கட்ட அகழாய்வு பணி இந்த மாத இறுதியுடன் நிறைவு

சிவகளையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழ்வாய்பு பணிகள் இம்மாத இறுதியுடன் நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சிவகளையில் பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு முதல் முறையாக அகழாய்வுப் பணிகள்…

சிவகளையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழ்வாய்பு பணிகள் இம்மாத இறுதியுடன் நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சிவகளையில் பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு முதல் முறையாக அகழாய்வுப் பணிகள் தொடங்கியது. தொடர்ந்து மூன்றாம் முறையாக இந்த ஆண்டு சிவகளை பரம்பு பகுதியில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. 30-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இரும்புப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

மூன்று கட்டங்களாக நடந்து வந்த அகழாய்வு பணியில் இதுவரை 700க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாழ்விடப்பகுதிகளில் தக்களி எனும் நூல் பிரிக்கும் கருவி, கூர்முனை கருவி, வட்டசில்கள், சக்கரம், தங்கப்பொருள், கண்ணாடி வளையல்கள், சங்கு வளையல்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட காதணிகள், புகைப்பான் போன்ற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாள், கத்தி, உளி, கோடாரி போன்ற இரும்பு ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

3 கட்டமாக நடந்து வந்த அகழாய்வு பணியில் இதுவரை 120 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு. அதில் அதிகபட்சமாக இந்தாண்டு 80 முதுமக்கள் தாழிகள் ஆகும். பானைகள், கிண்ணங்கள், மூடிகள் என 800க்கும் மேற்பட்ட பொருட்களும், கீறல்கள், குறியீடுகள் கொண்ட பானைகள் 150க்கும் மேற்பட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.