உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி; பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ராஷ்மிகா மந்தனா

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் நடித்து பிரபலமான இவர், தமிழ்…

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் நடித்து பிரபலமான இவர், தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தனக்கே உரிய தனித்துவமான முக பாவனைகளை வெளிப்படுத்திய இவருக்கு தென்னிந்திய சினிமாவில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ள வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ராஷ்மிகா, ’மிஷன் மஜ்னு’ என்ற ஹிந்தி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இப்படி தெலுங்கில் பல வெற்றிகளை கொடுத்த ராஷ்மிகா முதல் முறையாக தமிழில் விஜய்யுடன் இணைந்து நடித்த ’வாரிசு’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. வாரிசு படத்தில் இடம் பெற்ற ரஞ்சிதமே, ஜிமிக்கி பொண்ணு பாடல்கள், பட்டி தொட்டி எங்கும் ராஷ்மிகாவுக்கு ரசிகர்களை வாரிக்கொடுத்தது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பிஸியாக நடித்து வரும்ராஷ்மிகா மந்தனா இன்று தனது 27வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ராஷ்மிகாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், வாழ்த்து தெரிவித்த  ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ‘உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி. என் நாளை மிகவும் சிறப்பானதாக ஆக்கிவிட்டீர்கள். நீங்கள் அனைவரும்  மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்’ என் பதிவிட்டுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.