“வாய்ப்புக்கு நன்றி டைரக்டர் சார்!” என ராயன் படத்தை இயக்கும் தனுஷிற்கு இயக்குநர் செல்வராகவன் நன்றி தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ’வாத்தி’ படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படம் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது.
இதற்கிடையே தற்போது தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்குகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் இப்படத்தில் தனுஷுடன் விஷ்ணு விஷால், ஜெயராம் காளிதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், மேலும் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. வடசென்னையை மையமாக கொண்ட இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க உள்ளார்.
எஸ்.ஜே.சூர்யா மற்றும் சந்திப் கிஷான் ஆகிய இருவரும் தனுஷின் சகோதரர்களாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் தலைப்பு “ராயன்” என தனுஷ் தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. சென்னையின் பிரபல ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக அண்மையில் கூறப்பட்டது.
ராயன் படப்பிடிப்பில் பிரபல இயக்குனரும், தனுஷின் அண்ணனுமான செல்வராகவன் கலந்து கொண்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது. “ராயன்” படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுகளும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் தூண்டும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இப்படத்தில் இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் செலவராகவன் நடிப்பதாகவும் மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இப்படம் குறித்து இப்படத்தின் இயக்குநரான தனுஷ் தனது X தளத்தில் தெரிவித்துள்ளதாவது..
“ “என்றாவது ஒருநாள் உங்களை இயக்குவேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை” என தெரிவித்திருந்தார்.
https://twitter.com/selvaraghavan/status/1760648764841468293
இதற்கு பதில் தெரிவிக்கும் விதமாக இப்படத்தில் நடித்துள்ள இயக்குநர் செல்வராகவன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது..
“ வாய்ப்புக்கு நன்றி டைரக்டர் சார்! உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்” என தெரிவித்துள்ளார். இருவரது எக்ஸ் தள பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.







