மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக தஞ்சையில் பெண்கள் நூதன போராட்டம்!

டெல்லியில் நீதி கேட்டு போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக தஞ்சை ரயில் நிலையம் முன்பு 30க்கும் மேற்பட்ட பெண்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த…

டெல்லியில் நீதி கேட்டு போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக தஞ்சை ரயில் நிலையம் முன்பு 30க்கும் மேற்பட்ட பெண்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த மல்யுத்த வீராங்கனை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி டெல்லி ஜந்தர் மந்திரில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நீதி கேட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் வீராங்கனைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் போராடி வரும் வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தஞ்சை ரயில் நிலையம் முன்பாக 30க்கும் மேற்பட்ட பெண்கள் கண்களில் கருப்பு துணி கட்டி கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

——கோ. சிவசங்கரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.