“சாவுக்கு துணிஞ்சவனுக்கு மட்டும்தான் இங்க வாழ்க்கை!” – வெளியானது ‘தங்கலான்’ திரைப்படத்தின் டிரெய்லர்!

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘தங்கலான்’.  இத்திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் மற்றும்…

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘தங்கலான்’.  இத்திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் மற்றும் டேனியல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 1900 களில் கோலார் கோல்ட் ஃபீல்ட்டில் {கே.ஜி.எஃப்} தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமூதாயம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.

இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.  இந்த திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். பா.ரஞ்சித்துடன் இணைந்து ஜி.வி பிரகாஷ் பணியாற்றுவது இதுவே முதல் முறை.

இந்த திரைப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது. வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிலையில், ‘தங்கலான்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.