தளபதி 68 வேடிக்கையான ரோலர் கோஸ்டர் சவாரியாக இருக்கும் : இயக்குநர் வெங்கட்பிரபு

தளபதி 68 ஒரு வேடிக்கையான ரோலர் கோஸ்டர் சவாரியாக இருக்கும் என இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்.19-ம் தேதி வெளியாகிறது. இதில் த்ரிஷா,…

தளபதி 68 ஒரு வேடிக்கையான ரோலர் கோஸ்டர் சவாரியாக இருக்கும் என இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்.19-ம் தேதி வெளியாகிறது. இதில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.

இதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்நிலையில் படத்தின் புதிய அப்டேட்டை இயக்குநர் வெங்கட்பிரபு வெளியிட்டுள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது :

https://twitter.com/vp_offl/status/1708814112011227362?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1708814112011227362%7Ctwgr%5E5de2ecb133150fd56d0440fd9cb1c25350bcfbda%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.maalaimalar.com%2F

உங்கள் அனைவரின் அன்பு மற்றும் வாழ்த்துகளுடன் Thalapathy 68 தொடங்கியது இது ஒரு வேடிக்கையான ரோலர் கோஸ்டர் சவாரியாக இருக்கும். மேலும் நம்ம லியோ ரிலீஸுக்கு பிறகு அனைத்து படங்களும் அப்டேட்களும் என இயக்குநர் வெகட்பிரவு கூறியுள்ளார். படத்தின் பூஜை எளிய முறையில் நடைபெற்றதாகவும், இதில் விஜய் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது.  ப்ரியங்கா மோகன், மீனாட்சி செளத்ரி, சிநேகா, லைலா, பிரசாத் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக  செய்திகள் வெளியாகியுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.