விருதுநகரில் உருவாக்கப்பட உள்ள ஜவுளி பூங்கா மூலம் நேரடியாக 1 லட்சம் வேலை வாய்ப்புகளும் மறைமுகமாக 2 லட்சம் வேலை வாய்ப்புகளும் உருவாகும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் 2,000 கோடி மதிப்பில் அதி நவீன கட்டமைப்புடன் மாபெரும் ஜவுளி பூங்கா ((PM Mitra park)) எனும் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடை பூங்கா அமைப்பதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா, மத்தியபிரதேஷ் மற்றும் உத்தர பிரதேஷ் ஆகிய ஏழு மாநிலங்களில் மாபெரும் ஜவுளி பூங்கா தொடங்கப்பட உள்ளது. அதில் முதலாவதாக தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரத்தில் அமைப்பதற்கான தொடக்க விழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ,மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் முன்னிலையில் மத்திய மாநில அரசுகளுக்கிடையே ஜவுளிப்பூங்காவுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
விருதுநகரில் அமையவுள்ள இந்த பிரமாண்ட ஜவுளிகள் மற்றும் ஆடைகள் தயாரிக்கும் மையத்திற்கான 1,052 ஏக்கர் இடத்தை தமிழ்நாட்டின் சிப்காட் ஒதுக்க உள்ளது. ஜவுளி பூங்கா அமைப்பதற்கு 500 கோடி ரூபாய் நிதி உதவியுடன் தேவையான ஆலோசனையையும் மத்திய அரசு வழங்க உள்ளது.
இந்த விழாவில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு. தமிழகத்தில் இந்த திட்டத்தை நிறைவேற்ற இருக்கிற முதலமைச்சருக்கும் தமிழகத்திற்கு இந்த திட்டத்தை கொடுத்திருக்கிற பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி. இந்த பூங்கா சாதாரண விஷயமல்ல. விருதுநகரில் 1502 ஏக்கரில் இந்த புங்கா தொடங்கப்பட உள்ளது.
இந்த பூங்கா மூலம் நேரடியாக 1லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பும் மறைமுகமாக 2லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பும் உருவாகும். தூத்துக்குடியிலிருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு தொழிற்துறை வளர்ச்சியை நாங்கள் மேம்மபடுத்தியிருக்கிறோம். 2014 வருடம் ரயில்வே பட் ஜெட் ஆனால் 6 ஆயிரத்து 50 கோடி ரூபாய் கொடுத்து மிகப்பெரிய அளவில் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்திருக்கினறது.1,896 கோடி ரூபாயை ரயில்வே திட்டத்திற்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி: ’1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்’ – மத்திய அரசு உதவ வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னையில் திருமழிசையில் 1420 கோடி ரூபாய் ஒதுக்கி வளர்சிக்கான நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை கொல்லம் எக்ஸ்பிரஸ்க்கான திட்ட வேலையும் தொடங்கப்பட்டிருக்கிறது. தமிழ் காலாச்சராத்தை உலகெங்கும் எடுத்துச் செல்ல வேண்டுமென்பதற்காக ஐக்கியநாடுகள் சபையில் பிரதமர் மோடி முழங்கினார். காசியில் தமிழ்ச்சங்கம் நடத்தி தமிழை உலகெங்கும் எடுத்துச் செல்ல முனைந்தவர்.
சௌராஸ்ட்ரா தமிழ் சங்கமும் நடைபெற இருக்கிறது. ராசியான பட்டை நெய்து கொடுப்பவர்கள் அவர்களுக்கான விழாவாக கொண்டாட இருக்கிறார்கள். 700 வருடமாக நம்மை அடிமை படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயர்களை வெற்றி பெற்று நாம் இன்று தொழில் துறையில் வளர்ச்சி பெற்ற நாடாக நாம் முன்னேறி இருக்கின்றோம். இவ்வாறு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசினார்.







