’1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்’ – மத்திய அரசு உதவ வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழகத்தில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார நிலைக்கு கொண்டு வர மத்திய அரசு உதவிட வேண்டும் என உரிமையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். விருதுநகரில் 2,000 கோடி மதிப்பில் அதி நவீன கட்டமைப்புடன்…

தமிழகத்தில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார நிலைக்கு கொண்டு வர மத்திய அரசு உதவிட வேண்டும் என உரிமையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விருதுநகரில் 2,000 கோடி மதிப்பில் அதி நவீன கட்டமைப்புடன் மாபெரும் ஜவுளி பூங்கா ((PM Mitra park)) எனும் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடை பூங்கா அமைப்பதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா, மத்தியபிரதேஷ் மற்றும் உத்தர பிரதேஷ் ஆகிய ஏழு மாநிலங்களில் மாபெரும் ஜவுளி பூங்கா தொடங்கப்பட உள்ளது.  அதில் முதலாவதாக தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரத்தில் அமைப்பதற்கான தொடக்க விழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ,மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் முன்னிலையில் மத்திய மாநில அரசுகளுக்கிடையே ஜவுளிப்பூங்காவுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிகழ்ச்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது : வேளாண்துறைக்கு பிறகு நெசவு தொழில் வேலைவாய்ப்பு அதிகம் தரும் தொழிலாக உள்ளது. தமிழ்நாடு விருதுநகர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க முன்வந்த பிரதமர் மற்றும் பியூஸ் கோயலுக்கு நன்றி.

அண்மைச் செய்தி : தமிழக பாம்பு பிடி வல்லுனர்களுக்கு பத்மஸ்ரீ விருது; குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்!

பியூஸ் கோயல் பேசும்போது சொன்னார் மாவட்ட அமைச்சர்க்கு மகிழ்ச்சி என்று அவர்களுக்கு மட்டுமல்ல எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி. இந்திய நாட்டின் நூல் களஞ்சியம் என தமிழ்நாடு அழைக்கப்படுகிறது. ஜவுளி துறையில் பல்வேறு சாதகமான சூழல் உள்ளதால் தொழில் முதலீட்டாளர்கள் வருகின்றனர்.

தென் மாவட்டங்களில் தொழில்வளர்ச்சியை கவனத்தில் கொன்டு தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமரை அழைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பேசினார்  நிச்சயம் கண்டிப்பாக அழைப்போம். இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.