ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்களில் வரும் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை திருத்தம் மேற்கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதவிருக்கும் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களில், திருத்தங்களை மேற்கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து TRB வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ம் ஆண்டிற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் வாயிலாக கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி வெளியிட்டது. விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம் கடந்த ஏப்ரல் 26ம் தேதி வரை வழங்கப்பட்டது.
இதில், ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-க்கு 2,30,878 பேரும், தாள் II-க்கு 4,01,886 என மொத்தமாக 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
ஆகையால் விண்ணப்பதாரர்களின் கோரிக்கையினை ஏற்று ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I/IIக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் 11.07.2022 முதல் 16.07.2022 வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இனிவரும் காலங்களில் திருத்தம் தொடர்பாக எவ்வித கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்கள் http://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் TRB அறிவித்துள்ளது.