டெஸ்ட் போட்டி: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் இன்னிங்சில் 564 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இந்தியா..!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 564 ரன்களுக்கு டிக்ளேர் செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளும் 1 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடுகின்றன.

அதன் படி இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டி நியூ சண்டிகரில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய சிறப்பான ஆட்டத்தை வெளியிப்படுத்தியது. இந்திய அணியில் சிறப்பாக விளையாட கேப்டன் சுப்மன் கில் 126 ரன்கள் எடுத்தார். அதே போல தொடக்க ஆட்டகாரரான கே.எல். ராகுல் 100 ரன்கள் எடுத்தார். சாய் சுதர்ஷன் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் தன் பங்கிற்கு தலா 81 ரன்கள் விளாசினர்.

இந்த நிலையில் இன்று 127 ஓவர்களுக்கு 8 விக்கெட் இழப்பிற்கு 564 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. களத்தில் வாஷிங்டன் சுந்தர் அரை சதம் கடந்த நிலையிலும், பௌலர் குல்தீர் யாதவும் உள்ளனர்.

ஆப்கானிஸ்தான் சார்பில் முகமது சலீம் சபி 6 விக்கெட்டும், ஜியாவுர் ரகுமான்ஷரிபி, ஹஷ்மதுல்லா ஷாஹிடி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.