இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 116.4 ஓவர்களில் 462 ரன்கள் எடுத்து அனைத்து வெக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 230 பந்துகளில் 167ரன்கள் எடுத்தார். மேலும் இலங்கை வீரர் பிரபாத் ஜெயசூரிய 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத்தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 79.4 ஓவர்கள்ளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்கள் மட்டுமே எடுத்தாது. அதிகபட்சமாக இலங்கை வீரர் சோனல் தினுஷ் 100 ரன்கள் எடுத்தார். மேலும் இந்திய வீரர் மானவ் சுதர் 4 விக்கெட்ட்டுகளையிம் வீழ்த்தினார்.
இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிஸை ஆடிய இந்திய அணி 193 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 66 ரன்களும், படிக்கல் 44 ரன்களும் எடுத்தனர். 372 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது இரண்டாவது இன்னிஸை ஆடிய இலங்கை வீரர்கள் ஆரம்பம் முதலே தடுமாறினர். இலங்கை அணி 206 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமாக பந்து வீசிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர் இரண்டாவது இன்னிஸ்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஒட்டுமொத்தமாக 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.




