“அனைத்து புகைப்படக் கலைஞர்களுக்கும் ‘உலக புகைப்பட நாள்’ வாழ்த்துகள்!” – முதலமைச்சர் விஜய்

உலக புகைப்பட நாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் புகைப்பரக் கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலக முழுவது இன்ரு ‘உலக புகைப்பட நாள்’ கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் புகைப்படக் கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “ஓடும் காலத்தின் பக்கங்களை ஒரு கணத்தில் உறையச் செய்து, வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் சிறந்த சமூகக் கண்ணாடியே புகைப்படமாகும்.

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் வாழ்நாள் நினைவாக மாற்றுவதோடு, வார்த்தைகளால் சொல்ல இயலாத நிகழ்வுகளை கலைநயம் மிக்க புகைப்படங்களால் உணர்த்தும் அனைத்து புகைப்படக் கலைஞர்களுக்கும் எனது ‘உலக புகைப்பட நாள்’ நல்வாழ்த்துகள்! உங்களின் கலைப் பயணம் சிறக்கட்டும்!” இன்று கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.