இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தபால் வாக்குகளை மறு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை சுமார் 10 மணிக்கு மறு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.அப்போது அதிமுக தரப்பில் தபால் வாக்குகளில் பதிவு செய்யப்பட்ட 13 சி விண்ணப்பத்தை சரிபார்க்க வேண்டுமென தெரிவித்த நிலையில் அதற்கு அதிகாரிகள் தரப்பு மறுப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.வாக்கு சீட்டை மட்டுமே காட்டுவதாக தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்காலிகமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.






