” தமிழ்க்கவிக்கு இது எழுபதாவது பிறந்தநாள் ” – கவிஞர் வைரமுத்துவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து..!!

” தமிழ்க்கவிக்கு இது எழுபதாவது பிறந்தநாள் ” என கவிஞர் வைரமுத்துவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரிலும் தனது ட்விட்டர் கணக்கிலும் வாழ்த்து தெரிவித்துள்ளார். கவிஞர் வைரமுத்து தமிழ் சினிமாவில் மிக முக்கியமான கவிஞர் மற்றும்…

” தமிழ்க்கவிக்கு இது எழுபதாவது பிறந்தநாள் ” என கவிஞர் வைரமுத்துவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரிலும் தனது ட்விட்டர் கணக்கிலும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து தமிழ் சினிமாவில் மிக முக்கியமான கவிஞர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் கள்ளிக்காட்டு இதிகாசம் , கருவாச்சி காவியம், தண்ணீர் தேசம் மற்றும் மூன்றாம் உலகப் போர் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

நீங்களும் மழையாகுங்களேன்! - கவிஞர் வைரமுத்துவைரமுத்து 1953ம் ஆண்டு  ஜூலை 13ம்தேதி தேனி மாவட்டம், வடுகப்பட்டியில் பிறந்தார். விவாசய குடும்பத்தில் பிறந்த இவர் பள்ளிப்படிப்பை சொந்த ஊரிலெ முடித்தார். இதன் பின்னர் தமிழ் இலக்கியத்தில் தனது முதுகலைப் படிப்பை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பெற்றார்.

முதலில் மொழிபெயர்ப்பாளராகவும், கவிஞராகவும் பணியாற்றிய இவர் 1980 ஆம் ஆண்டில் இயக்குனர் பாரதிராஜா இயக்கி,  இளையராஜா இசையமையத்த நிழல்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமனார். நிழல்கள் படத்தில் இடம்பெற்று இன்று வரை அனைவராலும் கொண்டாடப்படும் “இது ஒரு பொன்மாலை பொழுது” பாடல்தான் வைரமுத்துவின் முதல் பாடலாகும்.

இதன் பின்னர் படிப்படியாக உயர்ந்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பாடலாசிரியராக உருவெடுத்தார். இளையராஜா-வைரமுத்து மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் – வைரமுத்து கூட்டனியின் மூலம் பல பாடல்கள் ஹிட் அடித்தன. இதுவரை 7முறை தனது பாடல்களுக்காக தேசிய விருதை பெற்றுள்ளார்.

இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவிஞர் வைரமுத்துவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இதன் பின்னர் முதலமைச்சர் தனது ட்விட்ட பக்கத்தில் “ கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்க்கவிக்கு இது எழுபதாவது பிறந்தநாள். இன்னும் பல படைப்புகளைத் தருக கவிஞரே! உமது திரைமொழியும் கவிமொழியும் தமிழ்மொழியை இன்னும் பல்லாண்டு வளர்க்கட்டும்!” என தெரிவித்துள்ளார். 

https://twitter.com/mkstalin/status/1679354236486946817?s=46

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.