குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியை இந்திய விண்வெளி துறை வெளியிட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் மூலம் செயற்கைகோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டு வருகிறது. இதனையடுத்து தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் சிறிய ரக ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தி வந்தார்.
இதற்கான அனுமதிகள் அளிக்கப்பட்டு 2,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றுள்ளது. பணிகளை தொடங்கும் விதமாக கட்டுமான பணி இந்திய அரசின் விண்வெளி துறைகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் தாலுகாக்களில் அமைந்துள்ள SSLV வளாகத்தில் இதற்கான கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே விண்வெளி தொழில் பூங்கா & விண்வெளி வாகனங்களுக்கான எரிபொருள் பூங்காக்களை அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது







