டெலிகிராமுக்கு ஒரே இரவில் இவ்வளவு பயனாளர்களா?

பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் 6 மணி நேரம் முடங்கியதால் 7 கோடி பயனர்கள் டெலிகிராம் செயலிக்கு மாறியதாக  அதன் சிஇஓ பாவல் துரோவ் தெரிவித்துள்ளார். ஆக்டோபர் 4 அன்று இரவு 9 மணி…

பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் 6 மணி நேரம் முடங்கியதால் 7 கோடி பயனர்கள் டெலிகிராம் செயலிக்கு மாறியதாக  அதன் சிஇஓ பாவல் துரோவ் தெரிவித்துள்ளார்.

ஆக்டோபர் 4 அன்று இரவு 9 மணி தொடங்கி வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் சுமார் 6 மணி நேரம் முடியங்கியது. நெருக்கமானவர்களை தொடர்பு கொள்வது முதல் தினசரி செய்திகள் அனைவருக்கும் கொண்டு செல்லும் வரை இதன் மூன்றின் முக்கியத்துவம் அதிகம். மொபைலில் டேட்டாதான் தீர்ந்துவிட்டது என்று பலர் மீண்டும் மீண்டும் ரிசார்ஜ் செய்ததாக இணையவாசிகள் கருத்து தெரிவித்தனர்.

இந்த 6 மணி நேர முடக்கத்தால் மார்க் சக்கர்பர்க்கிற்கு சுமார் ரூ. 45,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகவும் இதன் விளைவாக பேஸ்புக் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 121.6 பில்லியன் டாலராக குறைந்ததாகவும் தகவல் வெளியானது. அதனால் உலக பணக்காரர்கள் பட்டியலில் மார்க் சக்கர்பெர்க் பில் கேட்ஸுக்கு பின்னால் தள்ளப்பட்டார்.

இந்த முடக்கத்தால் டெலிகிராம் செயலிலுக்கு 7 கோடி பயனாளர்களை கிடைத்துள்ளதாக அதன் சிஇஓ பாவல் துரோவ் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் ‘எங்களது குழுவின் உழைப்பை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. சுமார் 7 கோடி புதிய பயனாளர்களை பெற்றுள்ளோம். அதிக பயனாளர்கள் ஒரே நேரத்தில் டெலிகிராம் செயலியை பதிவிறக்கம் செய்ததால் செயலியின் செயல்பாட்டில் வேகம் குறைந்த காணப்பட்டது. உலகம் முழுவதும் தற்போது 50 கோடி பயனர்கள்  டெலிகிராம் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்’ என கூறினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.