முக்கியச் செய்திகள் இந்தியா

தேஜஸ்வி யாதவ், சகோதரி வீடுகளில் ரூ.70 லட்சம் பறிமுதல்; அமலாக்கத்துறை

பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் மற்றும் அவரது சகோதரி வீடுகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.70 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் பல லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்த போது ரயில்வேயில் வேலை வாங்கி தருவதற்காக வேலை பெற்றவர்கள் தங்களின் நிலங்களை பரிசாக அல்லது குறைந்த விலைக்கு, லாலுவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பினாமிகளின் பெயர்களுக்கு எழுதித் தந்திருப்பதாகவும், இதன்மூலம் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், நிலமோசடி தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பாட்னா மற்றும் டெல்லியில் உள்ள லாலு பிரசாத் யாதவின் வீடு உள்ளிட்ட 24 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் லாலு பிரசாத் யாதவின் மகள்கள் மற்றும் மகன் தேஜஸ்வி யாதவின் டெல்லி வீட்டிலும் இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையில், ரூ. 70 லட்சம் ரொக்கம், 540 கிராம் தங்க கட்டிகள், 1.5 கிலோ தங்க நகைகள் மற்றும் 900 அமெரிக்க டாலர்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியது.

இதற்கிடையில் இந்த சோதனைகள் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள லாலு பிரசாத் யாதவ், ,”எனக்கு ராஸ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) மற்றும் பாஜகவுடன் கருத்தியில் ரீதியிலான போராட்டம் உள்ளது. அது தொடரும். நான் அவர்கள் முன் ஒருபோதும் பணிந்தது இல்லை. என்னுடைய குடும்பத்தினரோ, கட்சியினரே யாரும் அவர்களின் அரசியலுக்கு முன்பு பணியமாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குறைந்தது கொரோனா.. டெல்லியில் கடைகளைத் திறக்க அனுமதி

Gayathri Venkatesan

முதலிரவில் இளம்பெண்ணுக்கு பாலியல் சித்ரவதை: கணவன் மீது புகார்

Web Editor

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 7 பேர் பலி

G SaravanaKumar