பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு!

அம்பாசமுத்திரம் பற்கள் பிடுங்கப்பட்டது தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீசார் மேலும் 2 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.  நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிக்குட்பட்ட காவல்நிலையங்களில், விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி…

அம்பாசமுத்திரம் பற்கள் பிடுங்கப்பட்டது தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீசார் மேலும் 2 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். 

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிக்குட்பட்ட காவல்நிலையங்களில், விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது திருநெல்வேலி குற்றப்பிரிவு போலீசார் பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் மேலும் 2 வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முன்பு நடந்த விசாரணையின் போது, மாரியப்பன், சுபாஷ், இசக்கிமுத்து, வேத நாராயணன், செல்லப்பா மற்றும் மாரியப்பன் ஆகிய 6 பேர் ஆஜராகினர். இந்த 6 பேருடன்  எதிர் தரப்பினரும் விசாரணைக்கு நேரில் வருகை தந்த நிலையில், மொத்தம் 12 பேர் விசாரணைக்கு ஆஜராகியிருந்தனர்.

கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் விசாரணை அழைத்துச் செல்லப்பட்ட சுபாஷ் என்பவர் அளித்த புகாரில் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து வழக்கை சிபிசிஐடி போலீஸ் இன்ஸ்பெக்டர் உலக ராணி விசாரித்து வருகிறார்.

அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த 17 வயது சிறாரின் பற்கள் பிடுங்கியது சம்பந்தமாக சிபிசிஐடி போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி திட்டமிட்ட குற்றங்கள் பிரிவின் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார்.

இது சம்பந்தமான வழக்கில் விசாரணை அதிகாரி சங்கர் முன்னிலையில் அம்பை பகுதியைச் சேர்ந்த கணேசன் ,அருண்குமார் ,சந்தோஷ் ,குணசேகரன் ,ராசு ,மகேந்திரன் ,சாம் ஆகிய 7 பேரும் வருகிற 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நெல்லை சி பி சி ஐ டி அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.