ஆசிரியர் தினம் – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

ஆசிரியர் தினத்தையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில், இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “ஒழுக்கத்தையும், தன்னம்பிக்கையையும், வாழ்வின் உயர்ந்த மதிப்புகளையும் ஒருங்கிணைக்கும் கல்வி அறிவைக் கற்றுத் தந்து, ஒவ்வொரு மாணவனின் எதிர்காலத்தையும் வடிவமைக்கும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களுக்கான நல்வழி அரசியலை அதிமுக எனும் பேரியக்கம் வாயிலாக நமக்குக் கற்றுத் தந்த அரசியல் ஆசான்களான நம் இதயதெய்வங்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரை இந்நாளில் போற்றி வணங்குகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.