தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதற்கிடையே, நேற்று முன் தினம் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதேபோல, நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. நேற்று சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,880-க்கும், கிராமுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,360-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது..
இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.170 குறைந்து ஒரு கிராம் ரூ.14,190-க்கு, சவரனுக்கு ரூ.1,360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.




