முக்கியச் செய்திகள் தமிழகம்

கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தவுள்ளேன்: லியோனி 

கல்வி தொலைக்காட்சி மூலம் வாரத்திற்கும் ஒருமுறை வகுப்பு எடுக்கவுள்ளதாக பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார். 
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த லியோனி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்திற்கு பதிலாக புத்தகம் தரவேண்டும் என்று கூறியதன் மூலம் வந்த 2 லட்சம் புத்தகங்களை நூலகங்களுக்கு கொடுத்துள்ளோம் என்றார்.
தமிழில் இருக்கக்கூடிய பல நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யும் வேலைகளும் நடந்து கொண்டு இருப்பதாகத் தெரிவித்த அவர், பொன்னியின் செல்வன், ஹிஸ்ட்ரி ஆஃப் சிவிலிசேஷன், மாபெரும் தமிழ் கனவு போன்ற பல புத்தகங்களையும் மொழிபெயர்க்க உள்ளோம் என்றார்.
கல்வி தொலைக்காட்சியை பார்வையிட்டேன் எனவும், தான் ஏற்கனவே 30 வருடமாக ஆசிரியராக இருந்ததாகவும், அந்த அனுபவம் மூலம் கல்வி தொலைக்காட்சி மூலம் வாரத்திற்கு ஒருமுறை வகுப்பு எடுக்கலாம் என்றுள்ளேன் எனக் கூறிய அவர், ஆங்கிலம், வேதியியல், இயற்பியல் பாடங்களை வகுப்பு எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
Advertisement:
SHARE

Related posts

ஏ.கே.ராஜன் குழு சமர்ப்பித்த அறிக்கை இணையதளத்தில் வெளியீடு

Saravana Kumar

நாமக்கல்லில் 2.70 டன் புகையிலை, குட்கா பறிமுதல்

Jeba Arul Robinson

இரவு நேர கேளிக்கை விடுதியாக மாறிய கார்… டாக்ஸி டிரைவரின் புதிய முயற்சி!

Jayapriya