ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் வில்வித்தை தனிநபர் பிரிவில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.  டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி, பிரவீன் ஜாதவ், தருண் தீப் ராய், அதானு…

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் வில்வித்தை தனிநபர் பிரிவில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி, பிரவீன் ஜாதவ், தருண் தீப் ராய், அதானு தாஸ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதில் ஆடவர் அணி பிரிவில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ், தருண் தீப் ராய், அதானு தாஸ் ஆகியோர் கொண்ட அணி தோல்வியடைந்தது. இதே போல், தனிநபர் சுற்றில் தருண் தீப் ராய் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார்.

 

https://twitter.com/Media_SAI/status/1420281023116447747

இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ், ரஷ்யாவைச் சேர்ந்த கால்சனை எதிர்கொண்டார். இதில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரவீன் ஜாதவ், 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்த சுற்றில் அமெரிக்காவின் எலிசனை பிரவீன் ஜாதவ் எதிர்கொள்கிறார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.