முக்கியச் செய்திகள் தமிழகம்

டி.டி.எஸ் பிடிக்கப்பட்டவர்களும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டுமா?

ஜூலை 1ம் தேதி முதல் வருமான வரி சட்டத்தில், புதிய பிரிவு அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய நேரடி வரி வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும், என்ற நோக்கத்தில் கடந்த பட்ஜெட்டின் போது, வருமான வரி சட்டத்தில் 206 ஏ.பி. மற்றும் 206 சி.சி.ஏ. ஆகிய 2 பிரிவுகள், புதிதாக சேர்க்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஒருவரிடம் இருந்து டி.டி.எஸ். வசூலிக்கப்படும் பட்சத்தில், அவர் கண்டிப்பாக பான் எண் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல், ஒருவரிடம் இருந்து டி.டி.எஸ் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால், அவர் கண்டிப்பாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும், என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வரி கணக்கு தாக்கல் செய்யாமல் இருந்தால், இனி இருமடங்கு அபராதம் செலுத்த வேண்டியது இருக்கும் என்றும், இந்த புதிய சட்டப்பிரிவு ஜூலை 1-ந் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும், மத்திய நேரடி வரி வாரியம், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

காவல்துறையினருக்கு தலா ரூ. 5 ஆயிரம் வழங்கும் ஊக்கத் தொகை திட்டம்

Gayathri Venkatesan

ஐதராபாத் அணிக்கு 150 ரன்கள் இலக்கு

Saravana Kumar

ஆந்திரா – ஒடிசா இடையே இன்று கரையை கடக்கிறது ’குலாப்’

Ezhilarasan