ரிலையன்ஸ் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிய TCS

பங்குச்சந்தை மதிப்பில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை டாட்டா கன்சல்டன்ஸி சர்வீசஸ் பின்னுக்கு தள்ளியுள்ளது. கொரோனா காலத்தில் உலகம் முழுவதும் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்தது. ஆனால் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஃபேஸ்புக்,…

பங்குச்சந்தை மதிப்பில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை டாட்டா கன்சல்டன்ஸி சர்வீசஸ் பின்னுக்கு தள்ளியுள்ளது.

கொரோனா காலத்தில் உலகம் முழுவதும் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்தது. ஆனால் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் கோடிக்கணக்கில் முதலீடுகளை குவிந்தன. உலக பணக்காரர்கள் பட்டியலிலும் அவர் தொடர் முன்னேற்றத்தை கண்டு வந்தார். இந்நிலையில் இன்றைய பங்குச்சந்தை மதிப்பின்படி, டிசிஎஸ் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது. டிசிஎஸ் நிறுவன பங்குச்சந்தை மதிப்பு 1.26 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் அதன் மதிப்பு ரூ.12.55 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

பங்குச்சந்தை மதிப்பில் 5 சதவீத சரிவு ஏற்பட்டதால், ரிலையன்ஸ் நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம் இதன் மதிப்பு ரூ.12 லட்சம் கோடியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னதாக கடந்த செப்டம்பர் 16ம் தேதி நிலவரப்படி, ரிலையன்ஸ் நிறுவன மதிப்பு ரூ.14.58 லட்சம் கோடியாக இருந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக முன்னேற்றத்தை கண்டு வந்த ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply