ஆன்லைன் மூலம் போலி இன்சூரன்ஸ் நிறுவனம் நடத்தி வந்த கும்பல் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆன்லைன் மூலம் மோசடிகளில் ஈடுபடுபவர்களை பிடிக்க தமிழக காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் ‘யுனைடெட் இந்தியா நிறுவனம்’ ஆன்லைன் போலி இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்று குறித்து காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலிடம் புகாரை அளித்திருந்தது. இதனையடுத்து அவரின் உத்தரவின் பேரில் விசாரணையை தொடங்கிய மத்திய குற்றபிரிவு போலீசார், ஆன்லைன் போலி இன்சூரன்ஸ் நிறுவனம் நடத்தி வந்த மாரியப்பன் என்பவரையும் அவரது உதவியாளர் சுமதி, ஆனந்த், அன்சார் அலி, ஜெயின் அலாவுதீன், செந்தில் குமார் ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.

இவர்கள் 2 சக்கர வாகன காப்பீடு விவரங்களை வைத்து பேருந்து லாரிகளுக்கு குறைந்த விலையில் போலியாக காப்பீடு தயாரித்துள்ளனர்
என்றும் இதுவரை 300 க்கும் மேற்பட்ட போலி காப்பீடு பெற்று தயாரித்துள்ளனர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.







